எல்லாப் பணிகளையும் போல, அறிவியல் துறையிலும் பல்வேறு தவிர்க்க முடியாத கோளாறுகள் நடந்திருக்கின்றன. வித்தியாசமாக எதையேனும் செய்ய முற்படும் போது சில கோளாறுகளும், எதிர்பாராத சம்பவங்களும் அரங்கேறத் தான் செய்யும். ஆனால் அறிவியல் ஆய்வுகளில் இது மிகவும் வேகமாக நடந்து முடிந்து விடும்.
பொதுவாக அறிவியல் சார்ந்த ஆய்வுகள் மிகவும் சிக்கல் நிறைந்ததாகவும், ஆபத்தானதாகவும் இருப்பதால் இதன் சோதனைகளில் ஆய்வாளர்கள் தங்களையே வைத்து சோதனை செய்வர். மற்றவர்கள் சோதனையில் ஈடுபட முன்வர வாய்ப்பில்லாததால், ஆய்வாளர்கள் தங்கள் மீது மிகவும் ஆபத்தான சோதனைகளை மேற்கொள்வர்.
அறிவியல் ஆய்வுகளில் இது போன்ற சோதனை இருப்பதால் இவை மிகவும் கடினமானதாக அறியப்படுகின்றது. மேலும் சோதனை தோல்வியடைந்தால் அவைகளை முட்டாள்தனமான ஆய்வாக அழைப்பர்.
1921 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த எவான் ஒ நெயில் கேன் என்ற மருத்துவர் தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்ததால் இவர் தன்னை தானே அறுவை சிகிச்சை செய்த கொள்ள அனுமதிக்கப்பட்டார். அச்சமயம் 60 வயதான கேன் தன்னிச்சையாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதோடு இல்லாமல் பல்வேறு பிரச்சனைகளுக்காக அவர் பல முறை தன் உடலை அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த பின் சூப்பர் சோனிக் ஜெட் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சூப்பர் சோனிக் வேகத்தில் பறக்கும் விமானத்தை ஒரே அடியில் நிறுத்தும் போது விமானிகளின் உடல் தாங்கும் நிலையைச் சோதிக்க அமெரிக்க வான்படை சார்பில் சோதனை செய்ய திட்டமிடப்பட்டது.
இச்சோதனையில் போலிகளை பயன்படுத்தினால் விடை கச்சிதமானதாக இருக்காது என்பதால் ஜான் பால் ஸ்டாப் தன்னையே சோதனையில் ஈடுபடுத்திக் கொண்டார். அதிகளவு ஆபத்தான இச்சோதனையில் மனம் தளராமல் ஈடுபடுத்திக் கொண்ட ஸ்டாப் சுமார் 7 ஆண்டுகள் முயற்சித்து சுமார் 29 முறை தன்னை வைத்தே சோதனை செய்தார்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் காலரா பாதிப்பு மிகவும் கொடியதாக இருந்தது. இந்நிலையில் காலரா நோய் பரப்பும் கிருமிகள் அசுத்தமான இடங்களில் தான் அதிகம் பரவுகின்றன என ராபர்ட் கோச் என்பவர் தெரிவித்தார். இதற்கு டாக்டர். மேக்ஸ் ஜோசப் மற்றும் வான் பெட்டன்கோஃபர் என்ற மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தன் கூற்றை நிரூபிக்கும் விதமாக ராபர்ட் கோச் காலரா நோய் பரப்பும் சுமார் 100,000,000 மடங்கு காலரா காக்டெயில் அருந்தினார். தன் உடலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் மக்கள் இவரது கூற்றை நம்பினர்.
விர்ஜினியாவை சேர்ந்த உளவியலாளர் மற்றும் ஆய்வாளரான லீஷான் மனிதர்கள் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கைவிடச்செய்யும் நோக்கில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இதில் நகம் கடிக்கும் பழக்கம் கொண்ட ஆண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டோர் இரவு உறங்கும் போது (my nails taste terribly bitter) என் நகங்கள் மிகவும் சுவையானது என்ற வாசகத்தைச் சொல்லச்சொன்னார். சில நாட்களில் பலர் தங்களது நகம் கடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டனர்.
வயிற்றில் அல்சர் நோய் ஏற்படக் காரணம் அதிகப்படியான மன உளைச்சல் இல்லை, மாறாகக் கிருமிகள் தான் என்பதை மருத்துவர்களான ராபின் வாரென் மற்றும் பேரி மார்ஷெல் ஆகியோர் தெரிவித்தனர். இதனை எலிகள் மீது ஆய்வு மேற்கொண்டு அவர்கள் தெரிவித்த நிலையில், எலிகளின் மீது மேற்கொண்ட ஆய்வினை மனிதர்கள் மேல் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டது.
பின் தங்களையே சோதனை எலிகளாய் கலத்தில் இறங்கிய மருத்துவர்கள் அல்சர் உண்டாக்கும் கிருமிகளை சேகரித்து அவற்றை ஒரு முறை அருந்தினர். பின் அல்சர் மூலம் பாதிக்கப்பட்ட அவர்கள் சரியான மருந்து உட்கொண்டு மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பினர். இதன் மூலம் அவர்கள் அல்சர் நோய் கிருமிகளின் மூலம் தான் ஏற்படுகின்றது என்பதை நிரூபித்தனர். இதற்கென 2005 ஆம் ஆண்டு இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment